Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”இந்த இடத்துலதான் பாலாறு ஓடுச்சு” - இப்படி சொல்லும் நாள் வந்துவிடுமோ?

பாலாறு

நம் அப்பாக்களும் தாத்தாக்களும் பார்த்த, விளையாடிய பல ஆறுகள் இன்று காணாமல் போய்விட்டன. ஆறுகள் எங்கே ஓடியதோ, அங்கே நாகரிகம் வளர்ந்தது. ஆனால் இன்று ஆறுகளை ஆக்கீரமித்து கட்டடங்களாவும், பிளாட்டுகள் போட்டும் விற்கும் அவல நிலை. அதில் முக்கியமானது, பால் போன்ற ருசியான நீரைக் கொண்டதால் பாலாறு எனப் பெயர் கொண்ட நதி. வரும் தலைமுறைக்கு மிகப் பெரிய பள்ளம் இங்கே உள்ளது எனப் பாலாறு இருந்த இடத்தை கூறும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

பாலாற்றின் பயணம்:

கர்நாடாகவின் கோலார் மாட்டத்தில் இருக்கும் நந்தி மலையில் உருவாகி கர்நாடகாவில் 93 கி.மீட்டரும், ஆந்திரப் பிரதேசத்தில் 23 கி.மீட்டரும் பயணம் செய்கிறது  பாலாறு. பின்னர் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் பயணம் செய்து கிட்டதட்ட 2,50,000 ஏக்கர் பாசனப்பரப்பை கடந்து காஞ்சிபுர மாவட்டம் வயிலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிழகத்தில் மட்டும் பாலாற்றின் பயணப் பாதை 242 கிலோ மீட்டர் தூரமாகும்.

பாலாற்றின் பயன்கள்: 

பாலாற்றினால் தமிழகத்தில் 32 ஆயிரத்து 746 ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள் நீர் பெற்று அவற்றின் கீழ் 15 ஆயிரத்து 409 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. பாலாற்றுக்குத் துணை நதிகளாக மலட்டாறு, அகரம் ஆறு, கவுண்டியா ஆறு , பொன்னை, சேயாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பாலாற்றில் மொத்தம் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருந்ததாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன. தமிழகத்தின் நெற்கஞ்சியமான தஞ்சைக்கு அடுத்தபடியாக (வட ஆற்காடு மாவட்டம் ) ஓருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் அதிக அளவில் நெற்பயிரிடும் பகுதியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் பாலாறுதான்.

பாலாற்றின் பிரச்னைகள்:

பாலாற்றின் பயம் இரண்டு காரணங்களுக்காகத்தான் இருக்க முடியும். ஒன்று நீரோட்டம் உள்ள இடங்களில் கழிவுகளைச் சேர்ப்பது, மற்றொன்று நீரோட்டம் இல்லா இடங்களில் மணல்களைச் சூறையாடுவது. பாலாற்று படுகையில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகள் ஒவ்வொரு நாளும் 45-50 மில்லியன் லிட்டர் வரை தண்ணீரை உபயோகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே அளவு  தண்ணீர் தொழிற்சாலை கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. வேலூர்  மாவட்டத்தில் 1226 தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தியாவில் தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்கு 37 விழுக்காடகும். தோல் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் சையனைடு, பாதரசம் , குரோமியம் உள்ளிட்ட வேதியியல் இரசாயன கலவைகள் நேரடியாகப் பாலாற்றில் கலக்கின்றன. தோல் பதனிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் குரோமியம் புற்றுநோயை வரவழைக்ககூடியது. நீர் நிலையிலிருந்து 1 கி.மீ வரை சுற்றுசூழலுக்கு கேடு  விளைவிக்கும் எந்தத் தொழிற்சாலையும் அமைக்கக் கூடாது என 1989ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை (எண் 213) ஒன்று வெளியிட்டது. ஆனால் வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 800 தோல் தொழிற்சாலைகளின் குரோமியம் கழிவுநீர் கலக்கிறது. உலகில் குடிநீர் பயன்பாட்டில் உள்ளவற்றில் மிகவும் மாசுப்பட்ட 10 நதிகளில் பாலாறும் இடம் பிடித்திருப்பதுதான் சோகமான செய்தி. 

ஆறு

இரண்டாவது மணற்கொள்ளை. 20 அடிக்கு மேல் மணல் பாலாற்றில் சூறையாடப்பட்டுவிட்டது. இன்னும் பாலாற்றில் மணற்கொள்ளை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருபுறம் கார்ப்பரேட் கம்பெனியாலும், மறுபுறம் மணல் மாப்பியாக்களாலும் பாலாறு சூறையாடப்படுகிறது. இதை, அரசும் கண்டும் காணாததும் போல்தான் இருக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close