Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூரில் துப்புரவுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!.

 

 

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு துப்புரவுத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை அறிவர் அம்பேத்கர் தூய்மைத் தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் மூலம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளாக அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலித் பாண்டியன் தெரிவித்ததாவது,  "2003 ஆம் அண்டுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்ட தூய்மைத் தொழிலாளர்களுக்குப் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கரூர் நகராட்சி ஒப்பந்த தூய்மைத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புத் தொகையை உடனே அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதேபோல், தூய்மைத் தொழிலாளர்களுக்குக் கையுறை, காலுறை, காலணி போன்றவற்றை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும். கரூர் நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து வார்டுகளிலும் சுகாதாரம் நலம் காக்க தூய்மைத் தொழிலாளர்களின் காலிப்பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும். ஓட்டுநர் மற்றும் மேற்பார்வையாளர்கள் காலிப்பணியிடங்களையும் தூய்மைத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்க வேண்டும்.


அதேபோல்,2003 ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற மற்றும் இறப்பு எய்திய தூய்மைத் தொழிலாளர்களின் பங்களிப்புத் தொகையை உடனே அரசு வழங்க வேண்டும். தூய்மைத் தொழிலாளர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அரசு அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சீனியாரிட்டிபடி வரிசைப்படுத்தி பட்டியல் அறிவிக்க வேண்டும். அதேபோல், ஒப்பந்தப் பணிகளைத் தூய்மைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களுக்கு வெளியூர்களிலிருந்து ஆட்களை நியமனம் செய்யாமல், கரூர் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களையே நியமனம் செய்ய வேண்டும். அதேபோல்,கரூர் நகராட்சி மேலாளர் தமிழ்ச்செல்வி தூய்மைத் தொழிலாளர்களை அநாகரிகமான முறையில் நடத்துவதை தடுத்து நிறுத்தி, அவர்மீது அரசுத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 


கழிவுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பழுதில்லாத வாகனங்களாகத் தர வேண்டும். தனியார் வசமுள்ள ஒப்பந்தத் தூய்மையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூர் நகராட்சியின் நிரந்தர தூய்மைத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிற வருங்கால வைப்பு நிதியின் நிதிநிலை அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5 ம் தேதிக்குள் சம்பள ரசீதுடன் மாதச்சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல்,தூய்மைத் தொழிலாளர்களின் சரண்டர், செலக்ஷன் கிரேடு, இன்கிரிமென்ட்டை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும்" என்று பேசினார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close