Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அயோத்தி - பாபர் மசூதி பெயர் சர்ச்சை: டிச.5-ல் இறுதி விசாரணை!

உச்ச நீதிமன்றம் - அயோத்தி வழக்குஅயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன் பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கு விசாரணைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அசோக் பூஷன், அப்துல் நஸீர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, அது தொடர்பான ஆவணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை 12 வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி - பாபர் மசூதி பெயர் தொடர்பான தாவாவில் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் பல்வேறு மொழிகளிலான ஆவணங்களை 10 வார காலத்திற்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்படாது என்றும், குறிப்பிட்ட இந்தக் காலத்திற்குள் அதை நிறைவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டில் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை தொடங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் ஒருமித்த கருத்தை எடுத்து அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close