Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம்மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்றம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையை குடியரசுத் துணைத்தலைவராகப் பதவியேற்ற எம்.வெங்கைய நாயுடுவும் ஒத்திவைத்தனர். இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 17-ம் தேதி கூடியது. 

இந்தக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் மக்களவை 19 நாள்கள் நடைபெற்று, சுமார் 71 மணி நேரம் அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை நிதிநிலை அறிக்கைக்கான ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 17 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 14 மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து கூடுதலாக 10 மணி நேரம் விவாதம் நடைபெற்றுள்ளதாக சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பதற்கும், அதற்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெங்கைய நாயுடு கூறினார். மாநிலங்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அளவிலான வாய்ப்புகளை வழங்க தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா, வங்கிகள் முறைப்படுத்துதல் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close