Advertisement
அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- ஒரு மினி தொடர் - பாகம் 2

 - கரு.முத்து
                           
2000 மாவது ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது காசுக்கு கல்வி கலாச்சாரம். அதுவரை பட்டும் படாமலும் முக்கிய சில படிப்புக்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்து சீட் வாங்கவேண்டியிருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்துதான் எல்லா படிப்புகளுக்குமே காசு வாங்குவது எழுதப்படாத சட்டமாக ஆனது. அதற்கு முந்தைய கால அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பொற்காலமாக விளங்கியது. 

ஒரு மாணவன் அங்கு படிக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே போதும். அழைப்புக் கடிதம் வீடு தேடி வந்துவிடும். விண்ணப்பத்தின் விலை ஐம்பது ரூபாயோ, நூறு ரூபாயோ படிப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் பல்கலைகழகத்துக்கு வந்து நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். எம்.ஏ, போன்ற படிப்புகளை ஒரு மாணவன் விடுதிகட்டணத்தோடு சேர்த்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்குள் முடித்துவிடலாம்.

பொறியியல் படிக்க இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாக ஆகும். பெரிய படிப்பான மருத்துவப் படிப்புக்கும் நிலைமை அப்படித்தான் இருந்தது. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் கட்டணம் மட்டும் கட்டிவிட்டு மருத்துவம் படிக்கலாம். வேளாண்மை படிப்புகளுக்கும் அப்படித்தான் மிகக் குறைந்த கட்டணம் இருந்தது.

2000த்துக்கு பிறகு வேளாண்மை, பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புக்கள் பணம் காய்ச்சி மரமாகியது. இந்த மூன்று படிப்புக்களுக்கும் சேருவதற்கு பல்கலைக் கழகத்தில் நேரடியாக அனுமதி கிடைக்காது.  இணைவேந்தரை பார்த்துத்தான் சீட் வாங்க வேண்டும். அவரும் ஆரம்பத்தில் பணமெல்லாம் வாங்கவில்லை.

சிதம்பரத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில அளவிலான முக்கிய பிரமுகர்கள்,  வருவாய்த்துறை காவல்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் அவரை சந்தித்து பையனுக்கோ, பெண்ணுக்கோ சீட் வேண்டும் என்று கேட்டால் போதும். உடனடியாக வழங்கப்படும். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளில் கட்சிப் பதவிக்கு பலத்த போட்டி ஏற்பட்டது. ஒரு லெட்டர்பேடு இருந்தால் போதும். அதை வைத்து செட்டியாரிடம் சீட் வாங்கிவிடுவார்கள். அவரின் இந்த இரக்கக் குணத்தை பல்கலைகழகத்தின் பண ஆசை பிடித்த சில நிர்வாகிகளும் கல்வியாளர்களும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள்.

அதற்காக அவர்கள் கடைபிடித்த உத்தி ரொம்பவும் பழைய பாணிதான். எம்.ஏ.எம் ராமசாமியை எப்படியாவது அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவரைப் பார்த்ததும் காலில் விழுந்து வணங்குவார்கள். "என்ன விஷயம்?" என்று அவர் கேட்டதும்  ‘‘ஐயா எங்க சொந்தகார பையன் ஒருத்தன், ரொம்ப ஏழைங்க, இஞ்சினியரிங் படிக்க ஆசைப்படறான்யா’’ என்று சொல்லி திரும்பவும் காலில் விழுவார்கள். உடனடியாக அவர்கள் கேட்ட சீட் வழங்கப்படும். அதை  வாங்கிக் கொண்டு வந்து தங்கள் இஷ்டத்துக்கு அதற்கு விலை வைத்து விற்று காசு கொடுத்த மாணவர்களை சேர்த்தார்கள். இப்படி மருத்துவத்துக்கு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை விலை நிர்ணயித்தார்கள். வேளாண்மைக்கு ஒரு லட்சம் என்று ஆக்கினார்கள். பொறியியலுக்கு இருபத்தைந்தாயிரம் ரேட்.

 

ஒரு துறையில் உள்ள ஒரு பேராசியரோ அல்லது ஊழியரோ இப்படி எம்.ஏ.ம்மை பார்த்து சீட் வாங்குவதை பார்த்ததும், அதே துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஆசை துளிர்விட தொடங்கியது. அவர்களும் தனித்தனியாக சென்னைக்கு படையெடுக்க தொடங்கினார்கள். சிதம்பரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் செட்டியாரை பார்க்க அணி வகுத்தார்கள். நாளொன்றுக்கு இப்படி சில நூறுபேர் வரையிலும் தன்னை பார்க்க வருவதை கண்டதும் அவர்களை சந்திக்க மறுத்த செட்டியார், தன்னுடைய உதவியாளரான எஸ்.ஆர் என்று பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்படுகிற ராஜேந்திரனை பார்க்க உத்தரவிட்டார். சீட் வேண்டுமா ராஜேந்திரனை பார்த்தால் போதும் என்ற நிலைமை உருவானது. அப்போதுதான் செட்டியாருக்கு பணம் கொடுக்கும் வழக்கமும் ஆரம்பித்தது.

பத்து மெடிக்கல் சீட் கொடுங்க என்று கேட்டு ஒரு சீட்டுக்கு பத்துலட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை மொத்தமாக ராஜேந்திரனிடம் கொடுத்துவிட்டு சீட் வாங்கி பதினைந்து லட்சம், இருபது லட்சம் என்று வெளியில் விற்றார்கள் புரோக்கர்கள். பொறியியல் படிப்புக்கும் இப்படித்தான் மொத்தமாக ஒரு தொகையை கொடுத்துவிட்டு ஐம்பது, நூறு என்று அட்மிசன் வாங்கிவிடுவார்கள். அதனை மாணவர்களுக்கு பல ஆயிரங்களை மேலே வாங்கிக் கொண்டு விற்று கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

இவர்களிடம் சீட்டை வாங்கி அதை தாங்கள் இன்னும் அதிக விலைக்கு விற்று பிழைப்பவர்களும் பெருத்தார்கள். இப்படி ஒட்டுமொத்த ஊழியர்களுமே ஒரு கட்டத்தில் புரோக்கர்களாகிவிட்டார்கள். தொழில் போட்டி ஏற்பட்டது. அடிதடிகள் நடந்தது. ஒரு கொலையும் நடந்துமுடிந்தது.  பல்கலை ஊழியர்களை பார்த்து  சென்னையில் செட்டியார் அரண்மனையில் வேலை பார்க்கும் அத்தனை தொழிலாளிகளுமே புரோக்கர்களாக மாறினார்கள்.

அங்கிருக்கும் துப்புரவு தொழிலாளி கூட இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்கள். அவர்களுக்காக செட்டியார் இலவசமாக தரும் சீட்டை பெற்று அதை லட்சங்களுக்கு விற்று சம்பாதித்தார்கள்.

இவ்வளவும் நடக்கிறதே பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர் என்று எல்லோரும் இருக்கிறார்களே அவர்கள் என்ன செய்துகொன்டிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் தொடர்பு உண்டா? அதையெல்லாம் நாளை பார்ப்போம்...    

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்- பாகம் 1 படிக்க இங்கே க்ளிக் செய்க


 

உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Your email will not be published. Required fields are marked *

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

இந்திய அரசின் புதிய IT கொள்கையின்படி, எந்தவொரு தனிநபர், சமூகம், மதம் மற்றும் நாடு போன்றவை தொடர்பான தலைப்பிற்கு எதிராக விரும்பத்தகாத கருத்தைத் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற கருத்திற்குச் சட்ட நடவடிக்கை (தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும்) எடுக்கப்படும். இந்தக் குழுவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு கருத்திற்கும் ஆசிரியர்தான் முழுபொறுப்பாளர் ஆவார்.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு விகடன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

வாசகர்களின் கருத்துக்கள் விகடனின் கருத்துக்கள் அல்ல.

கருத்துக்கள் நெறியாளுகைக்கு உட்பட்டவை.

தனி நபர்கள் மீதான தாக்குதல், கட்டுரை மற்றும் செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் இணையதளத்திலிருந்து நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்த பகுதியை தவறாக பயன்படுத்துவோர் மற்றும் இணையதளத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படுவோர் இணையதளத்தை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

நல்ல முறையில் ஆரோக்யமான வகையில் கருத்து சுதந்திரத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

தவறான கருத்துக்களை கண்டால் துஷ்பிரயோகம் தெரிவி (REPORT ABUSE) என்ற பட்டனை அழுத்தவும்.

Comment(s): 10
Profile

skv 2 Years ago

இவருக்கு என்ன பிள்ளையா குட்டியா எதுக்கு இம்புட்டு பணத்தாசை

 
Profile

rajagopalan 2 Years ago

ஒவ்வொரு ஆண்டும் கணக்குத் தணிக்கை நடைபெற்று ஒரு தவறான நியமனம், ஏற்க இயலாத செலவினம் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டுமே? ஆக அரசும் தன கடமையை ஆற்றாது இருந்திருக்கின்றது. பல்கலைக் கழக ஊழியர்கள் போல் அரசு அதிகாரிகள் அடைந்த பயன்களை அறிய வேண்டாமா?

 
Profile

sr 2 Years ago

20 years before they had collected 1.5 lakhs for seat, now I wonder who actually took how much?

 
Profile

தில்லை தொண்டன் 2 Years ago

1998 க்கு பின்பு அரசு அனுமதித்த ஆசிரியப் பணி இடங்களை விட அதிகம் நியமனம் செய்தது இன்றைய நிலைக்கு பல்கலையை கொண்டு சென்றது. நாங்கள் பயிலும் காலத்தில் , முத்தையா செட்டியார் பட்டமளிப்பு விழாவிற்கு வரும்போது , தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களை அன்று மாலையே தனி அழைத்து , " நீ என்ன எதிர்காலத்திட்டம் வைத்துள்ளாய்? இங்கேயே வேலை தருகிறேன் , பல்கலைக்கழகத்திற்கு உன்னை போல் இளம் ஆசிரியர்கள் தேவை என்று தகுதிவாய்ந்தவர்களை நியமனம செய்தார்...ஆனால் இன்று , அண்ணாமலை என்ற சொல்லில் இரண்டு சுழி 'ன' போட்டு எழுதுபவர்கள் புரோக்கர் புண்ணியத்தில் பேராசிரியர்கள்!!!

 
Profile

மாப்ளே 2 Years ago

பாலா ,
எல் கே ஜி க்கு ரைமிங்க பி எஸ் ஜி வந்தது.மத்தபடி எந்த உள்நோக்கமும் இல்லை. கருத்தின் சாராம்சம் , எல்லா கல்லூரியும் காசு வாங்கிக்கொண்டுதான் பாடம் சொல்லி தருகிறார்கள்.எல்லா கல்லூரிக்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். சமுக நீதி பெருந்தலைவர் பெரியார் பெயரில் இயங்கும் கல்லுரி கூட அப்படித்தான். நீங்கள் சொல்வது போல் அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி. நிங்கள் சொல்வதை பார்த்தால் பி எஸ் ஜி ஓனர் நல்லவர் போல் தெரியுது. பின்னால் லாபம் வரும் என்று நினைத்து நிறைய பேர் பிஸ்னஸ் ஆரம்பிப்பது சகஜம் தான். சிலநேரம் 25000 நட்டத்திலேயே முடிந்துவிடும். என்னைப்பொருத்தவரை தரமான பள்ளிக்கல்வி எல்லோருக்கும் கொடுப்பது வரிவாங்கும் அரசின் கடமை. பள்ளிகல்வி முடிந்தவுடன் நல்ல மாணவனுக்கு உதவித்தொகையுடன் கல்லுரி படிப்பு தருவதும் அவசியம். பணக்கார மாணவன் படிப்பு வராவிட்டாலும் கல்லூரிக்கு சென்று டைம் பாஸ் செய்ய நினைத்தால் அதற்கு உண்டன கட்டணத்தை வாங்கிக்கொண்டு கல்லூரியில் அனுமதிப்பதில் தவறு இல்லை. அந்த பணம் கல்லுரி நடத்த உபயோகப்படும்.

 
Profile

Rama 2 Years ago

.....இதில் 30 % மட்டும் உண்மை
70 % அநியாயம் மறைக்கபடுகிறது ..
60 % மாணவர்கள் தகுதியர்ற்றவர்கள்
65 % அசிரியர்கள் தகுதியர்ற்றவர்கள்

 
Profile

மாப்ளே 2 Years ago

இப்படி பார்த்தால் இன்று தமிழகத்தில் நடக்கும் அணைத்து கல்வி நிலையங்களும் (எல் கே ஜி இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி முதல் பி எஸ் ஜி இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி வரை ) பணம் வாங்கிக் கொண்டுதான் படிப்பு சொல்லித்தருகின்றன. இவை எல்லவற்றையும் அரசுடமை ஆக்கப்பொகிறத அரசு? உண்மையான காரணம் என்னனு யாருக்கு தெரியும். அம்மாகிட்ட பவர் இருக்கு. அவர் நினைத்தால் எதையும் அரசுடமை ஆக்கி அமைசர்கள் பணம் சம்பாதிக்க உதவலாம். பட் அமைச்சர்கள் அம்மா கண்ட்ரோல இருப்பார்கள். படிக்க பரபர்ப்பதான் இருக்கு. பட் ...

 
Profile

Crap 2 Years ago

அதுவரை பட்டும் படாமலும் முக்கிய சில படிப்புக்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்து >>>>>

எந்த காலத்தில இருக்கீங்க சார், 1992 ம் வருடம் பொறியியல் (எந்திரவியல்) சீட் ஒன்றின் விலை ரூ.45,000, மெடிக்கல் சீட் ஒன்றின் விலை ரூ.1,25,000

 
Profile

mani 2 Years ago

Pizaikkarathikku chettiyaruku vera vaziye illaya. Manuda sevai maraiinthe poyirre

 
Profile

Pradeep 2 Years ago

நல்ல மாந்தர்களை irkka விட மாட்டார்கள் இந்த பூமியில் போல. பாவம் செட்டியார்.

 
Advertisement

வாக்களிக்கலாம் வாங்க...

கங்குலி அல்லது ரவி சாஸ்திரி அல்லது டிராவிட் ஆகிய மூவரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம்?
placeholder