தனி தமிழ்நாடு கேட்டு ம.தி.மு.க. வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்!

மதுரை: தனி தமிழ்நாடு அமைக்க உத்தரவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி  மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ம.தி.மு.க. மாநில செயலாளர் ஏ.பாஸ்கர சேதுபதி சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பிரதமர் நேரு காலத்தில் இருந்து இன்று வரை தமிழகத்தின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நதிநீர் பிரச்னை, நிதி ஒதுக்கீடு, மீனவர் பிரச்னை என்று அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்பட்டுகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் விரக்தியில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர்.

எனவே, தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும். தனி அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகின்றனர். தாக்குதலும் நடத்துகின்றனர். உரிய பாதுகாப்பு தரவேண்டிய மத்திய அரசு பாராமுகத்துடன் உள்ளது.

எனவே, தமிழக மக்களை காப்பாற்ற வேண்டிய உடனடி தேவை உள்ளதால் கப்பல் படை தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டையும் மக்களையும் பாதுகாக்க முப்படைகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு தனி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். காஷ்மீரைப்போல தனி அந்தஸ்து வேண்டும்.

##~~##
மத்திய அரசிடம் உள்ள அவசர நிலை பிரகடன அதிகாரத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாட்டின் உச்சநீதிமன்றமாகவும், மதுரை கிளை உயர் நீதிமன்றத்தை, தமிழகத்தின் உயர் நீதிமன்றமாகவும் மாற்றி அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், விமலா ஆகியோர் முன்னிலையில் கடந்த 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த மனு தேசத்தை துண்டாடுவது போல உள்ளது. எனவே, இந்த வழக்கை நாங்கள் விசாரிக்காமல் வேறு நீதிபதிக்கு மாற்றும்படி தலைமை நீதிபதியை கேட்டுக் கொள்கிறோம். ஏப்ரல் 5ஆம் தேதி மீண்டும், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மத்திய அமைச்சரவை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பவும் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

படங்கள்: பி.காளிமுத்து

Advertisement

உங்கள் ஆதரவுக்கு ஒரு க்ளிக் போதும்!

தமிழகத்தில் கவுரவக்கொலைகள் அதிகரிப்பதற்கு காரணம்...
placeholder
10.176.68.62:80