Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்போன் நூலகம்: அப்துல் கலாம் சொல்லும் அரிய யோசனை!

புதுச்சேரி:   எதிர்கால தலைமுறைக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த செல்போனில் நூலகம் அமைக்கும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மற்றும் டெல்லியில் உள்ள  டெல் நெட் இணைந்து “NACLIN 2014 ” என்ற மூன்று நாள் மாநாட்டினை புதுச்சேரியில் நடத்துகிறது. டிசம்பர் 11ம் தேதிவரை  நடைபெறும் இம்மாநாட்டை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் இன்று துவக்கி வைத்தார்.

புதுச்சேரி “ ஆனந்தா இன்” ஹோட்டலில் காலை 10 மணியளவில் துவங்கிய இந்த மாநாட்டில்,  அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துக்கள் விவாதிக் கப்படுகிறது.

நூலகப் பண்பாட்டின் எளிமையும், நூல்களின் வளமும் அனைத்து நூலகங்களிலிருந்தும் ஒரே மையத்தில் கொண்டுவந்து இணைப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்.

மாநாட்டை துவங்கி வைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், “தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளை புத்தகம் படிக்கப் பழக்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் தொலைக் காட்சி   பார்ப்பதை தவிர்த்து வாசிப்பு பழக்கத்தின் மீது கவனத்தை திருப்புவார்கள். அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் நூலகம் ஒன்று அமைக்க வேண்டும். சமூகவலைத்தளங்களில் நூலகம் குறித்த தகவல்களை கொண்டு வந்தால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய சூழ்நிலையில் எட்டு மில்லியன் மக்கள் செல்போன்களை பயன் படுத்துவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றைய அறிவியல் உலகில் செல்போன் என்பது தவிர்க்க முடி யாத ஒனறாகிவிட்டது. இதனால் அதில் நூலகம் தொடர்பான தொழில்நுட்பங்களை புகுத்தி மொழி மாற்றும் வசதியையும் ஏற்படுத்திட வல்லுனர்கள் முயற்சிக்க வேண்டும். எதிர்கால தலைமுறைக்கு அது மிகுந்த பயன்தருவதாக இருக்கும். அத்துடன் நடமாடும் நூலகங்களையும் அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக 'டெல்நெட்' இயக்குனர் H.K. கௌல், துணை இயக்குனர் சங்கீதாகௌல், பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் தலைவர் பியர் கேட் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் நூலக பண்பாடு பற்றிய கண்காட்சியும் இடம்பெற்றது.பலரும் அதை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நூலகர் பாலம் கல்யாணசுந்தரம் அப்துல் கலாம் அவர்களால் கவுரவிக்கப்பட்டார்.

மாநாட்டின் அடுத்த இரு தினங்களுக்கு அறிஞர் பெருமக்கள், பல்துறை வல்லுனர்கள், மற்றும் பலர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இன்றைய மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

-சு. கற்பகம்

( மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: குருஸ் தனம்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close