Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2.0 மேக்கிங் வீடியோ வெளியீடு!

சிவாஜி, எந்திரன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்-ரஜினி காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் தயாராகி வரும் படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 400 கோடி ரூபாய் செலவில், மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாலிவுட்டின் அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2.0 ரஜினி


இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன. இதனிடையே, இந்தப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணி காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

2.0


இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1.47 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் படம் உருவான விதம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close