Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமந்தா - சைதன்யா திருமணத்துக்கு பிரபலங்களுக்கு அழைப்பில்லை!

சமந்தா

மந்தா - சைதன்யா காதல் திருமணம் பலருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. சமந்தாவின் திருமண நிச்சயதார்த்தப் புடைவையில் தன் காதலை வெளிபடுத்தும் விதமாக காதலுக்கான சந்திப்புகளை அந்தப் புடைவையில் டிசைனாக்கியிருந்தார். இந்நிலையில், சமந்தா சைதன்யா கல்யாணத்துக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரை இந்த நிகழ்வு மிக முக்கியமானது. 'ஏ மாய சேசாவே' படம்தான் இருவருக்கும் முதல் என்ட்ரி.

இதையடுத்து சைதன்யா, நாகாவின் தாத்தா நாகேஸ்வர ராவ், அப்பா நாகார்ஜுனா, தம்பி அகில் என ஒட்டு மொத்த குடும்பமும் 'மனம்' என்கிற படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சமந்தாதான் ஹீரோயின். இப்படி திரையிலும் திரைக்குப் பின்னாலும் இவர்களின் காதல் மலர்ந்தது. இப்போது இவர்களின் திருமணத்தில் யார் யார் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு டோலிவுட்டில் நிலவி வருகிறது.

சமந்தா, சைதன்யாவின் திருமணம் இந்த மாதம் 4-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் திருமணத்தில் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவிருக்கின்றனர். பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. அவர்களுக்கென தனியே வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close