Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விரைவில் சாமி 2 படப்பிடிப்பு!

சிங்கம் படத்துக்குப் பிறகு ஹரி இயக்கப் போகும் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. டாடா சுமோவை விட வேகமாக ஓடும் இவரது திரைக்கதையில் அடுத்தாக விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. மேலும், இந்தப் படம் சாமி படத்தின் இரண்டாம் பாகம் எனவும் படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பு வந்த நாளிலிருந்து படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. 

saamy 2


சாமி 2 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். மேலும், படத்தின் வில்லனாக முதல் பாகத்தில் இருந்த பெருமாள் பிச்சை கேரக்டரை விட பத்து மடங்கு மிரட்ட பாபி சிம்ஹா நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களிலும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய முக்கியமான நபர், தற்போது எதுவும் கூறமுடியாது எனவும் ஆனால் சாமி 2 முதல் பாகத்தை விட செம ஃபையராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


இந்தப் படத்துக்கான இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருப்பார் என்று நினைத்த நிலையில், படத்தில் தேவி ஶ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close