Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வேலைக்காரன்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்க, மோகன் ராஜா இயக்கும் திரைப்படம், 'வேலைக்காரன்'. 'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் இந்தப் படத்தை, 24AM Studios சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். 

இந்தப் படத்தை, விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்வதாக முதலில் அறிவித்தார்கள். ஆனால், சில நாள்களிலேயே ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியிடுவதாகச் சொன்னார்கள். ஆயுத பூஜை விடுமுறைக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், படம் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், 'வேலைக்காரன்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என உறுதிப்படுத்தாத தகவலும் ஒருபுறம் வந்துகொண்டிருந்தது. 

ஆயுத பூஜை விடுமுறைக்கு என்னென்ன படங்கள் ரிலீஸாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 24AM Studios சார்பில், ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’சில காரணங்களால் 'வேலைக்காரன்' படத்தை செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால், அடுத்து வரும் பெரிய பண்டிகைக்கு 'வேலைக்காரன்' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டோம். அடுத்து வரும் பெரிய பண்டிகை, தீபாவளிதான். ஆனால், அந்த நாளில் சில பெரிய பட்ஜெட் படங்கள் வருவது ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், அதற்கு அடுத்த பண்டிகையான கிறிஸ்மஸுக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறேன். டிசம்பர் 22-ம் தேதி 'வேலைக்காரன்' திரைப்படம் ரிலீஸாகும். தாமதத்துக்கு வருந்துகிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close