Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீட் குறித்து படம் எடுங்க': ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கோரிக்கை வைத்த விஷால்! #SpyderAudioLaunch

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் மகேஸ் பாபு நடித்துள்ள படம் 'ஸ்பைடர்'. தெலுங்கில் தெறி மாஸ் ஹீரோவான மகேஸ் பாபு நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். இதன் காரணமாக, இதன் இசை வெளியிட்டு விழாவை சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடத்தினர்.  இசை வெளியீட்டு விழாவில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஷால்

விழாவில் பேசிய விஷால், "மகேஸ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்பதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். எங்களை எப்படி தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டார்களோ, அதைப்போலவே மகேஸ் பாபுவையும் ஏற்றுக்கொள்வார்கள். மகேஸ் பாபுவின் எல்லாப் படங்களையும் பார்த்துள்ளேன். படத்தில் அவரது ஓப்பனிங் சீனை மிஸ்ஸே செய்ய மாட்டேன். 

ஏ.ஆர்.முருகதாஸ் மிகச்சிறந்த இயக்குநர். ரமணா முதல் கத்தி வரை சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை அழகாக படம் ஆக்கியவர். சார் தயவு செஞ்சு மீண்டும் பாலிவுட்டுக்கு போகாதீங்க.. தற்போது நிலவும் பிரச்னை குறித்து படம் எடுங்க... நீங்க அதை ஏற்கெனவே ஐடியா பண்ணிருப்பீங்க" என்றார்.


அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஸ், "அவர் என்ன பண்ணணும்னு நீட்(டா) சொல்லிட்டீங்க" என்று கமென்ட் அடிக்க, அதற்கு விஷால், "அவர் அந்த சப்ஜெட்டையும் தொட்டுருவார்னு நினைக்கிறேன். அரசியல்வாதிகளுக்கு நீட் வேண்டும் என்று அதையும் படம் எடுத்துடுவார்" என்றார்.

விஷாலைப் போலவே ஆர்.ஜே.பாலாஜியும், நீட் குறித்து படம் எடுங்க என்று ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கோரிக்கை வைத்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close