Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழிசையை தரமற்ற முறையில் விமர்சிக்கவேண்டாம்..! சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை தரமற்று விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு சூர்யா நற்பணி மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், நடிகராகவுள்ள சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? என்று விமர்சனம் செய்தார். அதனையடுத்து சூர்யா ரசிகர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 'நீட் தேர்வு குறித்து சூர்யா, பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைக்கு சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான வரவேற்புகள் கிடைத்தன. ஆனால், எதிர்பாராதவிதமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மட்டும் சூர்யாவை மேலோட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

 

அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு எதிர்வினையாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில், தமிழிசையை தரமற்ற முறையில் விமர்சனம் செய்வதை அறிகிறோம். அதனை சூர்யா ஒருபோதும் விரும்பமாட்டார். கருத்து தளத்தில் வரும் விமர்சனைகளை நேர்மறையாக எதிர்கொள்வதே சூர்யா நமக்கு கற்றுத் தந்த பண்பு. அதைவிடுத்து இதுபோன்ற தரமற்ற செயலில் ஈடுபடும் மன்ற உறுப்பினர்களையும், சமூக வலைதளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையிலுள்ள கருத்துகளுக்கும், செயல்வடிவத்துக்கும் சூர்யா எப்போதும் உறுதுணையாக இருப்பார். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதாலேயே நம்முடைய உண்மைத் தன்மையை அவரிடம் விவரிக்கவேண்டியது இல்லை. நம் செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளித்தால்போதும். எம் தம்பிமார்களின் செயல்களை தமிழிசை சௌந்தர்ராஜனை எந்த விதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close