Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துப்பறிவாளன் ரிலீஸ்: தியேட்டர்களில் பறக்கும் படையாக மாறும் விஷால் ரசிகர்கள்!


இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

துப்பறிவாளன்


இதனிடையே, புதிய படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் தமிழ் கன் இணையதளத்தின் அட்மின், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். முதலில், தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலுக்கு தமிழ் ராக்கர்ஸ் மறுப்பு தெரிவித்தது. அதேபோல, தமிழ் கன் தரப்பிலும் தங்களது அட்மின் கைதுசெய்யப்பட்டதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும், முடிந்தால் 'துப்பறிவாளன்' படத்தைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று தமிழ் கன் சவால் விட்டது.


இந்நிலையில், 'துப்பறிவாளன்' ரிலீஸை முன்னிட்டு, அதை செல்போனில் பதிவுசெய்து பரப்புவதைத் தடுப்பதற்காகவும், அப்படி பதிவு செய்பவர்களைக் கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுக்கவும் தமிழகமெங்குமுள்ள விஷால் நற்பணி இயக்கம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. "இவர்கள், ஐந்து பேர் கொண்ட குழுக்களாக தமிழகத்திலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும், எல்லாக் காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளனர். இந்தப் பறக்கும் கண்காணிப்புப்  படைக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்று விஷால் ஃபிலிம் பேக்டரி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close