Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்பைடர் ட்ரெய்லர் ரிலீஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடித்திருக்கும் திரைப்படம், 'ஸ்பைடர்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், மகேஷ் பாபுவின் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில்; ஸ்பைடர் ரிலீஸ் ஆக உள்ளது. குறிப்பாக, மகேஷ் பாபு நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான். இதனால் படத்துக்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

ஸ்பைடர்


இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ட்ரெய்லரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே, சமூக வலைதளங்களில் லீக் ஆனது. ஆனால், லீக் ஆனது ரஃப் கட் வெர்ஷன் என்று விளக்கமளித்த படக்குழுவினர், அதிகாரபூர்வ ட்ரெய்லரை 12 மணிக்கு வெளியிட்டனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close