Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைரல்: ஜிமிக்கி கம்மல் மோகன்லால் வெர்ஷன்!

கடந்த சில வாரங்களாக தமிழக இளைஞர்களின் இதயத்தில், செம ஹிட் அடித்து வரும் பாடல் ஜிமிக்கி கம்மல். மோகன்லால் நடிப்பில் ஓணம் தினத்தன்று வெளியான திரைப்படம் ’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி கம்மல் என்ற பாடலின் வீடியோவை, படத்தின் ரிலீஸுக்கு முன்னரே வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ கேரளா மக்களுக்கு மட்டுமல்லாது மற்ற மாநிலத்துக்கு மக்களுக்கும் பிடித்திருந்தது.

மோகன் லால்

குறிப்பாக, எர்ணாகுளத்தில் இருக்கும் புனித தெரசா கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும் ஜிமிக்கி கம்மலுக்கு ஆடிய ஆட்டம், கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் டாப் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இதையடுத்து, பலரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு தங்களது வெர்ஷனை களமிறக்கி வருகின்றனர்.

ஆனால், இந்தப் பாடலின் நாயகனான மோகன்லால் இந்தப் பாடலில் இல்லாமல் இருந்தது, கேரள ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனால், தற்போது ஜிமிக்கி கம்மலுக்கு மோகன்லாலே இறங்கி குத்தியுள்ள வெர்ஷனை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை, மோகன்லாலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலை ஹிட் ஆக்கியதற்கு அந்த வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close