Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமாத் தயாரிப்பாளர் வருண் மணியன்மீது தாக்குதல்..! இரண்டு பேர் கைது

சினிமாத் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண் மணியனை மர்ம நபர்கள் ஸ்குரூட்ரைவரால் குத்தியுள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.


'வாயை முடி பேசவும்', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர், வருண் மணியன். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷாவுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆனால், ஏதொவொரு காரணத்தால் நிச்சயத்தோடு அவர்களது காதல் பிரிந்தது. இதையடுத்து வருண் மணியனுக்கும், மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தி கனிகா குமரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில், வருண் மணியன் அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அலுவலக லிஃப்ட்டில் அவர் சென்றபோது,  லிஃப்ட்டினுள் இரண்டு மர்ம நபர்கள் புகுந்து, ஸ்குரூட்ரைவரால் வருண் மணியனைத் தாக்கியுள்ளனர். அவர் தடுக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அவர்களுடைய தாக்குதலில் வருண் மணியன் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறையினர் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close