Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவியாவை இயக்குகிறார் 'டெம்பிள் மங்கீஸ்' விஜய் வரதராஜ்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஓவியாதான். ஓவியா ஆர்மி என இளைஞர்கள் ஓவியாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துவந்தனர். ஓவியா அந்த நிகழ்ச்சியை விட்டு நீங்கிய பின்பும் அவரைப் பற்றி செய்திகள் சோஷியல் மீடியாக்களில் பாப்புலரான வண்ணம் இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

ஓவியா

இந்நிலையில், 'டெம்பிள் மங்கீஸ்' எனும் யூ டியூப் சேனலில் கலக்கியவரும், ஜி.வி.பிரகாஷுடன் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் நடித்தவருமான விஜய் வரதராஜ், தற்போது இயக்கவிருக்கும் படத்தில் ஓவியா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயனாக, தெலுங்கு நடிகர் ஆதித்யா ஒப்பந்தமாகியுள்ளார்.  படத்தை, ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஹாரர் கலந்த காமெடி படமான இதன் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close