Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கியது!

தமிழில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை நாட்டில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் அதைவிட மிக அதிகமாக வைரலாவது 'பிக் பாஸ்' தான். ஓவியா ஆர்மி, மருத்துவ முத்தம் எனப் பல புது டாப்பிக்குகளை உருவாக்கி அதன் மூலம் இணையத்தைப் பரபரப்பாக வைத்திருந்தது இந்நிகழ்ச்சி. இப்போது கமல் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11-வது சீசன் தொடங்கவுள்ளது. 

பிக் பாஸ்

இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசனையும் இவர்தான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் வரும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து ஒளிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், 'ஒரு வகையில் நாம் அனைவரும் உறவினர் போன்றவர்கள்தான். ஒவ்வொரு சீசனின் போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். இந்த சீசனுக்கு வந்துள்ள புதிய போட்டியாளர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இந்த சீசன் முற்றிலும் புதுமையாக பொழுதுபோக்குடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும்' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close