Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் டீசர் வெளியானது!

மலையாளத்தில், கடந்த 2015-ம் ஆண்டு, இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இதில், மம்முட்டியும் நயன்தாராவும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் சித்திக். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

தமிழ் வெர்ஷனில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இறுதியில், படத்தின் கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் சூரி, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக பேபி நைனிகா மற்றும் 'சேதுபதி', 'ப.பாண்டி' படத்தில் நடித்த மாஸ்டர் ராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அரவிந்த் சாமி. 

ட்வீட்

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close