Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேளிக்கை வரிக்கு எதிரான முடிவுக்கு தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆதரவு..!

கேளிக்கை வரி தொடர்பான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு, தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. 


திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கேளிக்கை வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரியும், பிற மொழிப் படங்களுக்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்துசெய்யும் வரை அக்டோரபர் 6-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் வெங்கடேஸ்வர ராவ் எழுதியுள்ள கடிதத்தில், 'மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியுடன் கூடுதலாக விதிக்கப்பட்டிருக்கும் கேளிக்கை வரிக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close