Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா கூட்டணியில் மணிரத்னத்தின் அடுத்தப் படம்..!

மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மணிரத்னம் இயக்கத்தில்  கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. அதன்பின்னர் மணிரத்னத்தின் அடுத்தபடம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிவந்தன. இந்த நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெயரிடப்படாத இந்தப் படத்தை 'Production No-17' என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தில், விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மெகா பட்ஜெட்டில் எடுக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close