Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாண்டவர் அணி தலைமையில் நடந்த கடைசி பொதுக்குழு கூட்ட முழு விவரம்..!

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். நடிகர் சங்கத்தின் ஆண்டுக் கணக்கு வெளியிடப்பட்டது. மேலும், விழாவில் பழம்பெரும் நடிகைகளான காஞ்சனா, ஷீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வரும் 10-ம் தேதி சோ ராமசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு கண் பரிசோதனை முகாமும் அப்போலோ மருத்துவனையில் இருந்து மருத்துவ முகாமும் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டம் நிறைவடைந்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள், ''இது எங்கள் தலைமையில் நடக்கும் கடைசி பொதுக்குழு கூட்டம். வழக்கமாக நடக்கும் எந்தப் பிரச்னைகளும் இல்லாத வகையில் நடைபெற்ற சிறப்பான பொதுக்குழு கூட்டம். ஒவ்வொரு வருடமும் மூத்த கலைஞர்களை கெளரவிப்பது எங்கள் வழக்கம். அந்த வகையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகளான காஞ்சனா, ஷீலா, வைஜெயந்தி மாலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் பல நிர்வாகம் சார்ந்தது " என்றனர். 


    
மேலும் பேசிய விஷால், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் கலைஞரின் பெயரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்க இருக்கிறோம். சிவாஜி ஐயாவுக்கு மணிமண்டபம் கட்டியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கவும் தமிழ் சினிமாவுக்கு வரி மூலமாக மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள் என்ற கோரிக்கை வைக்கவும் தலைமைச் செயலகம் செல்ல உள்ளோம். அடுத்த வருடம் டிசம்பருக்குள் நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்படும். கட்டடம் கட்டுவதற்கு எதிராக போடப்பட்ட வழக்கு தள்ளுபடியாகி உள்ளது. ஆக, கட்டடப் பணி வெகுவிரைவில் தொடங்கும்' என்றார்.

அடுத்ததாக பேசிய நாசர், 'அடுத்த தேர்தல் ஆகஸ்ட் இறுதியில் வரும். இதே கூட்டணி நிச்சயம் போட்டியிடும். கட்டடத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலையே. ஆக, அடுத்த தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிடும் " என்றார் உறுதியாக.  'எங்கள் செயலுக்கும் எங்கள் நடவடிக்கைகளுக்கும் இடையூறாக யார் வந்தாலும் அதை நேரடியாக சந்திக்கத் தயார் ' என்றார் கருணாஸ்.

அடுத்துப் பேசிய பொருளாளர் கார்த்தி, 'ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் சென்றுகொண்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடவும் திட்டமிட்டு இருக்கிறோம். அதுகுறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் " என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close