Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டாக் லெஸ்... வொர்க் மோர்..!'- தனக்கு தானே உபதேசம் சொன்ன சல்மான் கான்


"இனி நான் குறைவாக பேசுவதே நல்லது. எது பேசினாலும் அது வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது" என இந்தி நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். சில நாட்களுக்கு முன்பு, தான் நடித்துள்ள 'சுல்தான்' படம் குறித்து கருத்து தெரிவித்த சல்மான், 'சுல்தான்' படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். 6 மணிநேரம் 120 கிலோ எடையை தூக்க வேண்டி இருக்கிறது. மல்யுத்த சண்டை காட்சியிலும் நடிக்க வேண்டி உள்ளது. இதனால் களைப்பாக இருக்கிறேன். தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் நிலைமையில் செல்கிறேன்" என கூறியிருந்தார்.

சல்மானின் கான் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும், சல்மான் கான், தனது கருத்துக்கு 7 நாட்களில் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மகாராஷ்ட்ரா மகளிர் ஆணையம், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், சல்மான் கானின் கருத்து தவறானது எனவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவரது தந்தை சலீம்கான் கூறியிருந்தார். ஆனால், சல்மான் கான் இந்த சர்ச்சை குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில் ஐரோப்பியாவில் நடைபெற்று வரும், 17வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சல்மான் கான், இது குறித்து மறைமுகமாக பேசியுள்ளார். விழாவில் பேசிய சல்மான், "இனி நான் குறைவாக பேசுவதே நல்லது. எது பேசினாலும் அது வேறு விதமாக சித்திரிக்கப்படுகிறது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ