Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நடிகர்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை!' - வருந்துகிறார் இந்த ஹீரோ

பாலிவுட்டில் பிரேக் அப் என்பது சர்வ சாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம். சமீபத்தில் பிரிந்தவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் 'பியூட்டி குயின்' கேத்ரீனா கைஃப். 

வெளிப்படையாகத்  தங்களுடைய பிரேக் அப் -ஐக் காட்டிவிட்ட போதும், வாய் திறந்து நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு மீண்டும் இணைந்து படம் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டு தற்போது நடிக்கிறார்கள். 

பாலிவுட்டின், இளம் நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நடிகர்களுக்குப்  பாதுகாப்பில்லை என வெளிப்படையாகக்  கூறியுள்ளார். இது பலரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.

ரன்பீர் கபூர், கேத்ரீனா கைஃப் பிரிவு பற்றிய கேள்விக்கு, "நான் பிரேக் செய்திருக்கிறேன் என்று, இதுவரை நான் சொன்னது கிடையாது. எனக்கு அதைப் பற்றி பேசவும் விருப்பம் இல்லை. எனக்கு நடக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் கேத்ரீனா கைஃப்புடன் பகிர்ந்து வருகிறேன். அவரை இப்பொழுதும், எப்பொழுதும் விரும்பி வருகிறேன் என்பதும் உண்மை. இதில் வருத்தப்பட ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். கேத்ரீனா தன்னுடைய வேலையை எப்பொழுதும் ரசித்து செய்பவர். இதில் எந்தத்  தடுமாற்றமும் இல்லை. மேலும், எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.'' என்று பதிலளித்துள்ளார்.

மேலும், ''நாங்கள் நடிகர்கள், எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. பெரும்பாலும் நடிகர்களுக்கு சுதந்திரமோ, பாதுகாப்போ இல்லை என்றே நினைக்கிறேன். எங்களுக்கும் ஆசாபாசம் இருக்கும் என்பதை மற்றவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். கேத்ரீனாவுக்கும் இது தெரியும். இந்தத்  தடையையும் அவர் தாண்டி வருவார் என்பதையும் நான் நம்புகிறேன். இருவரும் இணைந்து பணிபுரிவோம். இதில் எந்த மாறுபாடும் இல்லை" என்றார்.

-வே.கிருஷ்ணவேணி 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close