Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குண்டாக இருப்பது குறையில்லை! 'உள்ளம் கொள்ளை போகுதடா' ராம் கபூர்

ராம் கபூர் பலரும் அறிந்த, ரசித்த நடிகர்களில் ஒருவர். சினிமா மற்றும் சீரியல் துறை இரண்டையும் சரியாக பயன்படுத்தி வருபவர். Student of the year, Udaan போன்ற படங்களில் பெரிய அளவில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர். தற்போது பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'உள்ளம் கொள்ளை போகுதடா' சீரியல் வாயிலாக பல ரசிகர் வட்டாரத்தை தன் பக்கம் ஈர்க்க வைத்தவர்.

ராம் கபூர் என்றவுடன் நினைவுக்கு வருவது அவருடைய எடைதான். பல வருடங்களாக உடல் பருமனாகவே அவர் இருந்து வந்தாலும் அவரை ரசிக்கிற கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறதுஇது குறித்து அவரிடம் கேட்டால்,

'நான் ஒருபோதும் என்னுடைய உடல் எடை குறித்து கவலைப்பட்டது இல்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த இயக்குநரும் என்னுடைய உடல் எடையை குறைக்கும்படி வற்புறுத்தியது இல்லை. நான் நானாக இருப்பதால்தான் எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. கதாநாயகனாக நடிக்க முக்கியத் தகுது என்றால் அது உடல் தோற்றம்தான். நான் குண்டாக இருப்பதால் ஒருபோதும் எனக்கான வாய்ப்புகள் குறைவாக வந்ததே இல்லை. அது எனக்கு குறைவாக இருப்பதாக என்றுமே நினைத்ததில்லை. குண்டாக இருப்பது குறையில்லை. ஆனாலும் என்னுடைய திறமையை முடிந்தவரை காட்டிவருகிறேன். என்னை மதிக்கும் என் ரசிகர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்' என்றவர்,

''என்னை பொருத்தவரை நாளுக்கு நாள் சினிமா துறை மாறிக் கொண்டே வருகிறது. நிறைய கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. முதன் முதலில் இந்த துறைக்கு வரும் போது, இந்த துறையில் இருந்த கலாச்சாரம் இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. நடிகர்கள் அவர்களுடைய வேலையை விரைந்து கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிரபலங்கள் பலரும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ரோலில் நடிக்க வேண்டியுள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டியுள்ளது. நான் என்னதான் சினிமாவில் பல படங்களில் கமிட் ஆகியிருந்தாலும், தொலைக்காட்சியில் நடிப்பதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. எனக்குத் தெரிந்து பத்து வருடங்களாக பார்த்து வருகிறேன் இந்திய தொலைக்காட்சி துறைக்கும், உலக அளவிலான தொலைக்காட்சி துறைக்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை. உலகம் முழுவதும் தொலைக்காட்சியைப் பொருத்தவரை ஒரே மாதிரியான ரசனையுடன் தான் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வரும்போது பல விமர்சனங்கள் வந்தது. மேலும், இவ்வளவு பெரிய நடிகர் ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள், என பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகளை தந்தார்கள். ஆனால், இப்படிப்பட்ட வாய்ப்புகள் எனக்கு தேவை இல்லை என தவிர்த்துவிட்டேன். வித்தியாசமான, எனக்கு பொருத்தமான கதாப்பாத்திரங்கள் அமையும் போது நான் அந்த வாய்ப்பை மறுக்காமல் பயன்படுத்திக் கொள்வேன். கடந்த இரண்டு வருடங்களாக சினிமா துறையிலும் என்னுடைய நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இருந்த போதிலும், பலர் 'சினிமாவில் நடித்துவிட்டு இப்படி மறுபடியும் சீரியலுக்குள் நுழையும் போது மார்க்கெட் குறையும். ஏன் இந்த முட்டாள்தனத்தை செய்கிறீர்கள் என சிலபேர் கேட்கிறார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

-வே.கிருஷ்ணவேணி

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ