Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துப்புற மணி #TheSpitSong - video

பேருந்து நிலையம் பொது இடங்கள் என எங்கே பார்த்தாலும் எந்த கவலையும் இன்றி எச்சில் துப்புபவர்களை பார்த்திருப்போம்.  நம்மில் பலருக்கு அந்த பழக்கம் உண்டு. அந்த மனிதர்களை கிண்டலடித்து அவர்களை நோக்கி சாட்டையை சுழற்றி இருக்கிறார் நடிகர் மதன் பாபுவின் மகன் அர்ச்சித். அவர் இயக்கியுள்ள ’துப்புறமணி’ வீடியோ இப்போது இணையத்தில் வைரல்.

அவரிடம் பேசினோம்.  

" இப்போ எல்லோருமே சிங்கிள்ஸ் பண்றதுனா லவ் பிரேக் அப்,  காதல் , அது சார்ந்த பிரச்சனைகளை மையமா வைச்சு தான் பண்றாங்க. அதையும் மீறி ஒண்ணு ரெண்டு வீடியோக்கள் தான் பொதுமக்களோட  பிரச்னைகள் சார்ந்தும் விழிப்புணர்வு கொடுக்குற மாதிரியும் வருது. வழக்கமா நாம எல்லோருமே பிடிச்ச விஷயங்கள் மேல தான் ரொம்ப கவனம் செலுத்தி ஆர்வத்தோட செய்வோம் ஆனா எனக்கு பிடிக்காத விஷயமா செய்யணும்னு நினைச்சேன். அப்படி  ஒரு சிங்கிள்ஸ் வீடியோ பண்ணனும்னு யோசிச்சப்போ முதல்ல தோணினது துப்புறமணி கான்செப்ட் தான். அதுக்கான பாடலை எழுதும் போதே மியூசிக்கான வேலைகளையும் ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் பண்ண போறேன்னு சொன்னதுமே எவ்வளவோ நல்ல கான்செப்ட்ஸ் இருக்கே... அதை விட்டுட்டு எச்சில் துப்புறதை பத்தி பண்ணா யார் பாப்பாங்கனு தான் நிறைய பேர் சொன்னாங்க. ஆனா ஒரு வழியா பண்ணி முடிச்சு மக்களோட பார்வைக்கு வந்தப்புறம் நிறைய பேர்கிட்ட இருந்து நல்ல ரிவியூஸ் வந்துட்டு இருக்கு. வீடியோ முழுக்க முடிக்கிற வரைக்கும் அப்பாக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சு முடிச்சிட்டு தான் காண்பிச்சேன். ரொம்ப நல்லா வந்திருக்குனு சந்தோஷப்பட்டார். இதுல என்னோட வேலை பார்த்த நண்பர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு. அவங்களோட சப்போர்ட் இல்லன்னா  வீடியோ இவ்ளோ வெற்றிகரமா வந்திருக்காது.

இப்போ அடுத்ததா குடிச்சுட்டு வண்டி ஒட்டுறவங்கள பத்தின வீடியோவுக்கு வேலை செஞ்சுட்டு இருக்கோம். மத்திய அரசோடு இணைந்து இதோட  இந்தி வெர்ஷன் பண்ற வேலைகள்லயும் இறங்கியிருக்கோம்" என விவரிக்கும் அர்ச்சித். தொழில்முறைப் பாடகரும் கூட.

 அடுத்த முறை பொது இடங்கள்ல எச்சில் துப்புறதுக்கு முன்னாடி அப்படி செய்றது சரியானு கொஞ்சம் யோசிப்போம் பாஸ்...! 

 
வீடியோ லிங்க் :

 

 

 

 

- க. பாலாஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close