Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷ்ருதி, பரினீதி, க்ரிதி, கரீனா -பாலிவுட் காதல் கதைகள்!

ஷ்ருதி

ரன்பீர் கபூர்... பாலிவுட்டின் காதல் மன்னன். தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் என இவரின் காதல் ஹிஸ்டரி சுவாரஸ்யமானது. தனது எக்ஸ்-கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பற்றி எங்கும் பேச மாட்டேன் எனச் சொல்லி வந்த ரன்பீரிடம் மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது. “யார் பெஸ்ட்” தீபிகாவா கத்ரீனா?” இந்த முறை மனம் திறந்திருக்கிறார் ரன்பீர், தீபிகாதான் பெஸ்ட் என. #ரெமோ நீ காதலன்..ரெமோ நீ காதலன்.

தமிழ்ப்படமே நடித்ததில்லை என்றாலும் தமிழகத்தில் பரினீதி சோப்ராவுக்கு தனி மவுசு உண்டு. இதுவரை தனது லவ் போர்ஷனை பற்றி வாயே திறக்காதவர் பரினீதி. ஷாரூக்கின் ‘ஃபேன்’ பட இயக்குநர் மனீஷ் ஷர்மாவுடன் காதல் என செய்திகள் வெளியாகின. எதற்கும் பதில் சொல்லாத பரினீதி இப்போது “எனக்கும் லவ் பண்ண ஆசைதான். ஆனா இப்ப வரை நான் சிங்கிள்தான்” என வயிற்றில் ரோஸ் மில்க்கையே வார்த்திருக்கிறார். #கண்ணை நம்பாதே...உன்னை ஏமாற்றும்

 


ஸ்க்ரீன் தோனி சுஷாந்த் சிங் ராஜ்புத் தான் இப்போது பெண்களின் சிக்ஸர் நாயகன். க்ரிதி சனோன் யார்க்கரில் சுஷாந்த் போல்டு ஆகிவிட்டார் என கிசுகிசுத்தது பாலிவுட். ”அதெல்லாம் கேட்க நல்லாருக்கு..ஆனா நடக்கலையே பாஸ்” என கூலாக பதில் சொல்லியிருக்கிறார் ரீல் தோனி. #காதல் கிரிக்கெட்டு..விழுந்திடுச்சு விக்கெட்டு..

 


ரன்பீர் இப்போது சிங்கிள் என்பதால் இவரைப் பற்றிய கிசுகிசுகள் பாலிவுட்டில் வைரல். அதில் தற்போது சிக்கியிருப்பது நம்ம ஊர் ஷ்ருதி. ரன்பீரும், ஷ்ருதியும் ஒரே ஒரு விளம்பரம் தான் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதற்குள் கதைகள் கிளம்பிவிட்டன. அத்தனை கதைகளையும் “நான் சினிமால ரொம்ப பிஸி. இந்தக் கதையை கேட்க கூட நேரமில்லை” என மறுத்திருக்கிறார் ஷ்ருதி. #தனியே...தன்னந்தனியே..

 


உட்த்தா பஞ்சாப் வெளியானபோது பாலிவுட்டே பரபரத்தது. காரணம், எவர்க்ரீன் லவ் பேர்ட்ஸ் கரீனாவும் ஷாஹித்தும் நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாக நடித்தது. எந்த சிக்கலும் இல்லாமல், மெச்சூர்டாகவே இருவரும் நடந்துக் கொண்டார்கள். இப்போது, ஷாஹித் கரீனாவின் கணவர் சாயீஃப் அலி கானுடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் மைக் கரீனா பக்கம் திரும்ப “அட..அவங்க என்ன குழந்தையா? எப்படி நடந்துக்கணும்னு அவங்களுக்கு தெரியும்” என சூடாகியிருகிறார். #இதுக்கு சாங்கே கிடையாது.

- கே

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ