Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜீத்திற்கு பாலிவுட் வில்லன்..!

வீரம்,வேதாளம் படத்துக்குப் பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிந்து சண்டைக் காட்சிகளின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனும் நடிப்பதாக தகவல்கள் வந்தன.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குநர் சிறுத்தை சிவாவின் நண்பர் ஒளிப்பதிவாளர் வெற்றி தான் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு ரூபன். மேலும் படத்தில் தம்பி ராமையா, கருணாகரன், அப்புகுட்டி (எ) சிவராமன் ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட நாட்களாக இந்த படத்துக்கு வில்லனை தேடி வந்த நிலையில் அரவிந்த் சாமி, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், நான் ஈ சுதிப், பிரசன்னா என பலரின் பெயர் இதில் அடிபட்டது. ஆனால், இவர்களில் யாரைவும் தேர்வு செய்யாமல் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை பிக்ஸ் பண்ணியிருக்கார் இயக்குநர் சிறுத்தை சிவா.

இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும் தல ரசிகர்கள் படு குஷியாகி, தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் அஜீத்தின் 57-வது படமான இது அடுத்த வருடம் மே மாதம் ரிலீஸாகும் என்கிற தகவலும் வருவதால், அஜீத்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்தால் மெகா மாஸ் ஓபனிங் கொடுக்க நாங்க ரெடி என்று காத்திருக்கின்றனர் தல ரசிகர்கள்..!


எடிட்டர் சாய்ஸ்

MUST READ