Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லோகன் பட ட்ரெயிலர்

எக்ஸ்-மென் காமிக்ஸ் மற்றும் கார்ட்டூனைத் தொடர்ந்து திரைப்படமாகவும் உலக அளவில் பிரபலமானது. அப்படிப்பட்ட எக்ஸ்-மென் சீரிஸின் திரைப்படங்களில் வால்வரீன் கதாப்பாத்திரத்துக்காகவே பிறந்தது போல் இருக்கும் ஹியூ ஜேக்மெனும் அந்த படம் அளவுக்கு ரசிகர்களிடம் அபிமானத்தை பெற்றவர். 

 


இந்த எக்ஸ்-மென் சீரிஸல், வால்வரீன் கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து திரைப்படங்கள் தனியாகவும் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படங்களும் வசூலை வாரி குவித்தன. வால்வரீன் வரிசை திரைப்படங்களில், மூன்றாவது மற்றும் கடைசி திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரெயிலர் வைரலாக பரவி வருவது ஒரு புறமிருக்க, இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணி இசையும் கவனம் பெற்றுள்ளது. ஜானி கேஷ் என்ற அமெரிக்க பாடகரின் 'ஹர்ட்' என்ற பாடல், ட்ரெயிலரின் பின்னணியில் இசைத்துக் கொண்டிருப்பது, இந்த வீடியோவின் மற்றொரு சிறப்பம்சம். தியேட்டர்களில் அடுத்த ஆண்டு மூன்றாம் தேதி, கடைசியாக ஒரு முறை திரையரங்குகளில் வலம் வர இருக்கிறான் 'லோகன் என்கிற வால்வரீன்'

 

"லோகன், நீ என்ன செய்தாய்?"

"சார்லஸ்,இந்த உலகம் அப்படியே இல்லை"

"ம்யூடட்ன்ஸ், அவர்கள் இப்போது இல்லாமல் போய்விட்டனர் ".

"அவள் யார்?"

"அவள் உன்னை போல் தான்"

"மிகவும் உன்னை போன்றவள்."

"அவளுக்கு நம் உதவி தேவை."

"யாரோ வருவார்கள்."

"யாரோ வந்துவிட்டார்கள்"

"லோகன், உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது."

இந்த பத்தே வரி டயலாக்குகள்தான் நேற்று வெளியாகியுள்ள "எக்ஸ் மேன்" சீரியஸ் படங்களின் வரிசையில் அடுத்து வரப்போகும் படமான 'லோகன்"னின் ஒன்னரை நிமிட ட்ரைலரில் வருகிறது. ஆனால் வோல்வரின் பட ட்ரைலர்களின் பெர்பெக்ட் கட் இதில் மிஸ் ஆகவில்லை என்பது கூடுதல் சிறப்பு. ட்ரைலரின் காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை ஒரு கதையை ஊகிக்க செய்வது. ஆனால் படத்தில் வேறு ஒரு கதையை சொல்வது என்பதுதில் தொடங்குகிறது படத்தின் வெற்றி.

'ஓல்ட் மேன் லோகன்' என்கிற மார்வெல் காமிக்ஸின் அடிப்படையை வைத்து பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை. ஹுயு ஜாக்மென் சும்மாவே செம கெத்தா இருப்பாரு, இந்தப்படத்தில் ஃபிப்டி ப்ளஸில் "கபாலிடா" என வந்து நிற்கிறார். இதில் வோல்வரினுக்கு (ஹுயு ஜாக்மேன்) வயதாகிவிட்டது, (நிஜத்திலும் ஜாக்மேன் இனி வோல்வரின் சீரிஸ் பண்ணுவதில்லை என முடிவெடுத்துள்ளாராம்) அமெரிக்காவை சூப்பர் வில்லன்கள் குரூப் நாசப்படுத்தி 'வேஸ்ட் லேண்ட்" ஆக மாற்றி வைத்துள்ளது. எக்ஸ்-மேன்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் வோல்வரின் மேற்கு அமெரிக்காவில் மனைவி இரண்டு குழந்தைகளுடன் எளிய வாழ்க்கை வாழ்கிறார். வோல்வரினை தங்களூடன் வந்து இணைந்து கொள்ளும்படி வில்லன்கள் கூட்டம் வந்து நச்சரிக்கிறது. ஒரு கட்டத்தில் தனியொருவனாய் அவர்களை சந்திக்க வேண்டி வருகிறது. அனல் பறக்கும் நியூ யார்க் காட்சிகளில் க்ளைமாக்ஸ். 

இந்த படத்தின் மூலம் ஒரு புதிய வோல்வரின் வருகிறாள்- ஆம் பெண் வோல்வரின் இன்ட்ரோ இதில் இருக்கிறது. வோல்வரின் க்ளோனான இந்த பாப்பாவின் எண்ட்ரி இதற்கு அடுத்து வரப்போகும் எக்ஸ்மேன் பட சீரியல்களுக்கு ஸ்டார்ட் அப் என்பதே இந்த ட்ரைலரில் உள்ள மெசேஜ் .

 

 

 

 

 

-வரவனை செந்தில்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ