Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷேவாக்கின் பிறந்தநாள் அன்று நிறைவு பெற்ற சென்னை-28..!

கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சென்னை-28. இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை-28 படத்துக்குப் பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்று ஆறு படங்களை எடுத்துவிட்டு மறுபடியும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் படத்தின் படபிடிப்பு நேற்று முடிந்தது. ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் பிறந்தநாளான நேற்று, சென்னை-28 படத்தின் படபிடிப்பை நிறைவு செய்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ