Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திமுக வேட்பாளர் நடித்த படம்..!

உலக சாதனை முயற்சிக்காக 10 மணி நேரத்தில் ஒரு முழுநீள படத்தை எடுத்துள்ளனர், ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்‘ படக்குழுவினர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இதற்கான வேலையில் இறங்கிய இயக்குநர் செல்வா, படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முறையாக பயிற்சிகள் கொடுத்துள்ளார். மொத்தம் 7 கேமராக்களின் உதவியோடு நேற்று காலை 8மணிக்கு ஆரம்பமாக இந்த படபிடிப்பு மாலை 6மணிக்கு நிறைவு பெற்றது.

படத்தின் நாயகனாக டாக்டர் சரவணன் நடித்துள்ளார். இவர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு நேற்று திடீரென அறிவிக்கப்பட்டதால், படபிடிப்பில் அவர் 1மணி நேரம் இடைவெளி எடுத்துத்துள்ளார். அந்த நேரத்தில் அவர் அல்லாத காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வா. டாக்டர் சரவணன் இதற்கு முன்னதாக இரண்டு படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதாநாயகியாக கத்தி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனுகிருஷ்ணன் மற்றும் சிங்கம்புலி, குமரேசன், சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இது பேய் படம் என்பதால் எடிட்டிங் மற்றும் பின்னணி இசையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று, அதற்காக மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வா.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ