Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் சங்க கணக்குகள் நாளை வெளியீடு : விஷால்

நடிகர்  சங்க கணக்குகள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என விஷால் அறிவித்துள்ளார். 


நடிகர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக துணிகள், இனிப்புகள்  வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழாவில்,  நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.


விழாவில் நாசர் பேசும்போது, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் அனைவரும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


நாசரைத் தொடர்ந்து விழாவில் பேசிய விஷால், ‘நடிகர் சங்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியது தொடர்பான நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும். ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா நடைப்பெறும்’  என்று தெரிவித்துள்ளார்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ