Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரீமேக் படத்துக்குத் தயாராகும் கௌதம் வாசுதேவ் மேனன்..!

சிம்புவை வைத்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை எடுத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், அந்தப் படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அடுத்து தனுஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கிவரும் கௌதம், இந்த படத்துக்கு அடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்புலு படத்தை கையில் எடுக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அந்தப் படத்தை அவர் இயக்குகிறாரா அல்லது தயாரிக்கிறாரா என்பதுதான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். 
 

எடிட்டர் சாய்ஸ்