Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெருப்புகுமாருக்கு வயசாகிடுச்சு..!

மான் கராத்தே படத்தில் நெருப்புகுமாராக நடித்து கவனம் ஈர்த்தவர், அருண்ராஜா காமராஜா. கபாலி படத்தின் நெருப்புடா பாடல் இவரை புகழில் உச்சத்தில் வைத்தது. நடிகரா, பாடலாசிரியரா, பாடகரா என அனைவரையும் அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்திவரும் இவர், தற்போது நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு அலேக்காக தாவியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி, ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் திரைப்படம் மரகத நாணயம். இந்த படத்தில் வயதான கேரக்டரில் அருண்ராஜா நடிக்கிறார். அடிப்படையில் அருண்ராஜா ஒரு மிமிக்ரி கலைஞர் என்பதால், வயதான கேரக்டருக்கான குரலை அவர் மிகவும் எளிதாக பேசியுள்ளார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால், இவரது கேரியரில் மரகத நாணயம் ரொம்ப முக்கியமான திரைப்படமாகும். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ