Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் சேதுபதி படத்துக்குப் பெயர் மாற்றம்..!

விஜய் சேதுபதி, காயத்ரி நடித்து ரஞ்சித் ஜெயகொடி இயக்கியிருக்கும் படம் 'மெல்லிசை'. இந்த படம் ரொம்ப நாள்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், படம் ரிலீஸாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று மெல்லிசை படத்தின் பெயரை மாற்றியிருப்பதாக அந்த படத்தின் டைரக்டர் ரஞ்சித் ஜெயகொடி அறிவித்திருக்கிறார். 

வியாபார காரணங்களுக்காக மெல்லிசை படத்தின் பெயரை மூடுபனி அல்லது நெற்றிகண் என மாற்றலாம் என்று யோசித்து இறுதியில் புரியாத புதிர் என்று பெயரை மாற்றியுள்ளனர். இதே பெயரில் ஒரு படத்தை 1990ம் வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ளார். எனவே, இவர்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே படத்தின் பெயரை மாற்றியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ