Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படைப்பாளனை விட படைப்புகள்தான் முக்கியம் - சிவகுமார்

நடிகர் சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் ஸ்ரீநிவாசன், இயக்குநர் லிங்குசாமி, ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், இயக்குநர் வசந்த், கவிஞர் அறிவுமதி, டாக்டர் சொக்கலிங்கம், ஓவியர் அக ஸ்ரீதர், ஓவியர் தியாகு, நடிகை ரம்யாபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணு, எழுத்தாளர் பிரபஞ்சன், தயாரிப்பாளர் தனஞ்சயன், கவிதாலயா கிருஷ்ணன், பத்மஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “அப்பாவுக்கு எப்போதும் பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்தநாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம், ஆனால் அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தரிசிக்க சென்றுவிட்டார். இந்த வருடம் அவருடைய 75-வது பிறந்த நாள். இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம்.

கண்காட்சிக்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்காட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியை தொடர முடிவு செய்துள்ளோம். இனி வருடந்தோறும் அப்பாவின் பிறந்தநாள் அன்று ஓவிய போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்” என்றார்.

விழாவில் சிவகுமார் பேச்சுகையில்,“எனக்கு என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில் விருப்பமே இல்லை. இவர்கள்தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். படைப்பாளனை விட படைப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் படைப்புகள்தான் காலம் கடந்து நிற்கும்.

இப்போது அனைவரும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் பல ஆயிரம் ருபாய் செலவழித்து சாப்பிடுகிறார்கள். நானெல்லாம் அக்காலத்தில் வெறும் ஏழாயிரம் ரூபாய் செலவில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை பயணித்து வரைந்தேன். இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்திய என்னுடைய மகன்கள் மற்றும் இன்னொரு மகனான தனஞ்ஜெயனுக்கு நன்றி” என்று கூறினார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close