Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷாருக்கானின் 'டான் 3' அறிவிப்பு வெளியானது

1978-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் 'டான்' ரிலீசானது. இந்தப் படம் அப்போது ரஜினியை வைத்து 'பில்லா' என்று தமிழில் வெளியாகியது. இரண்டு படங்களுமே இரு மொழிகளிலும் சக்கை போடு போட்டது. அந்த இரு படமுமே அதே பெயரில் ஹிந்தியிலும் தமிழிலும் ரீ-மேக்  செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது. ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து 2006-ல் 'டான்' பட முதல் பாகம் வந்தது, பிறகு அதன் இரண்டாம் பாகம் 2011-ல் வெளியானது. இரு படங்களுமே ஃபரான் அக்தரால் இயக்கப்பட்டது. தற்போது, 'டான்' படத்தின் அடுத்த பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையும் ஃபரான் அக்தர் தான் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

 

 

 

எடிட்டர் சாய்ஸ்