Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரட்சகன் இரண்டாவது பாகம்... தியாகராஜன் குமாரராஜாவின் பட ஹீரோயின் #சினி அப்டேட்ஸ்

1997-ம் ஆண்டு, நாகர்ஜுனா மற்றும் சுஷ்மிதா சென் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வெளியான ரட்சகன் படம், பெரும் வெற்றியையும், பரவலான வரவேற்பையும் பெற்றது. அதன் பிறகு, ரட்சகன் பாணியில் நிறைய படங்கள் வந்தாலும், அந்தப் படம் அளவுக்கு சோபிக்கவில்லை. தற்போது, ரட்சகன் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட இருபது வருட இடைவெளிக்குப் பிறகு, அப்போது நடித்த நட்சத்திரங்களை வைத்து இந்த படத்தை மீண்டும் எடுத்தால், அது எப்படி இருக்கும் என்பது படம் வந்தால் மட்டும் தான் தெரியும்.ரட்சகன் இரண்டாம் பாகத்தில் நடிக்க நாகர்ஜுனா சம்மதித்து உள்ளார் என உறுதிப்படுத்தி இருக்கிறார் படத்தின் இயக்குநர் பிரவின் காந்தி.

 

2011ல், தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்தை வெளியிட்டார். இந்தப் படம் வணிக ரீதியில் தோல்வியடைந்திருந்தாலும், உலக அளவில் கவனம் பெறும் அளவுக்கு செய்நேர்த்தி இருந்தது. தியாகராஜன், அதன் பிறகு படங்கள் ஏதும் எடுக்காத நிலையில், தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசிலை வைத்து அடுத்த பட வேலைகளுக்கு தயாராகி வருகிறார். இந்த படத்தில், சமந்தாவும் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. எப்படியோ, படம் அறிவித்ததிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ