Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’ஸாரிங்கண்ணா விஜய்... ஆங்ரி பேர்டு சிம்பு!’ ஸ்டண்ட் தீனா (வீடியோ)

நல்லா பாக்குறதுக்கு மூஞ்சி சும்மா கொழ கொழன்னு இருக்குது வாரித்துண்ணுட்டு  போய்டுவேன் போ! - ஸ்டண்ட் தீனாவின் சென்னைத் தமிழ் எப்பவும் வசீகரம். தீனாவை சந்தித்தோம். பேட்டி என்றவுடனே படு குஷியான மூடுக்கு போய்விட்டார்.

"வட சென்னைன்னா எல்லாருக்கும் தெரிஞ்சது பாக்சிங், இன்னொன்னு கபடி, அப்பறம் ஃபுட்பால். ரிக்‌ஷா ஒட்டுறவரோட பையனா இருந்தாலும் சரி, மூட்டத் தூக்குறவரோட பையனா இருந்தாலும் சரி, இந்த மூணு விளையாட்டுலையும் நிச்சயம் இருப்பாங்க. இதெல்லாம் இல்லாம இன்னொன்னும் நிறைய பேர் விரும்பி செய்வாங்க. அது தான் ஸ்டண்ட். நானும் அப்டித்தான் வளர்ந்தேன், இப்போ ஸ்டண்ட்  தான் சோறு போடுது".

''பெரிய ஹீரோக்களை மிரட்டுற சீன்ல நடிக்குறப்ப உள்ளுக்குள்ள எப்பவும் ஒரு உதறல் இருக்கும். அவங்க முன்னாடி பம்முனா 'இவன் உண்மையாவே நம்ம முன்னாடி நடிக்கிறாம்பா'னு தெரிஞ்சிடும், சரின்னு கெத்தா தெனாவட்டா நின்னா, திமிரு புடிச்சவன்னு பேரு வந்துருவாங்க. இத பேலன்ஸ் செய்யறது ரொம்ப சவால். இதனால எந்த பெரிய ஹீரோன்னாலும் சரி, மொதல்லையே ஒரு வணக்கம் போட்டு, தம்பி எதும் பண்ணனா அப்டி இப்டினு சிரிச்சு மழுப்புவேன். அவங்களும் என் நிலைமைய புரிஞ்சுக்குவாங்க. சிம்பு சார்கூட வாலு பண்ணும்போது ஒரு விஷயம் பண்ணும்போது உண்மையாவே கோவப்பட்டார், அதுக்கப்பறம் அவர் என்ன செஞ்சாருன்னா...

முழு  பேட்டியையும் வீடியோவில் பார்க்க :-

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ