Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘காமெடி, கருத்து, காதல்..!’ - ஹிப்ஹாப் தமிழா ஆதி அதிரடி

இதுவரை ஆல்பம் பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். ஆதி அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “டக்கரு டக்கரு” பாடலை அவரே பாடி, இயக்கினார். ஆதி திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான ‘ஆம்பள’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் ‘ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ’ என்று சுந்தர்.சி கூறியிருந்தார்.

அதன் பின் ஆதியை நடிக்குமாறு கூறி வந்த இயக்குநர் சுந்தர்.சி டக்கரு டக்கரு பாடல் வீடியோவை பார்த்துவிட்டு ஹிப்ஹாப் தமிழா ஆதியிடம் நீங்கள் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே பாடல் வீடியோக்களை நடித்து இயக்கி வந்த ஆதி தன்னிடம் இருந்த கதையை இயக்குநர் சுந்தர்.சி-யிடம் கூற அவருக்கும் கதை பிடித்துப் போய் உடனே ஆரம்பிக்கப்பட்டது ‘மீசைய முறுக்கு’ திரைப்படம்.

அவ்னி மூவீஸ் சார்பில் 40 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமெடி, கருத்து, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கல்லூரிக் கதையாக இருக்கும் என்றும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close