Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டைய கௌப்பு, குட்டைய குழப்பு பைரவா விஜய் ஓப்பனிங் பாடல் வரிகள்...

விஜய் நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் பைரவா. தற்போது இதன் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கும் இதன் டீசர் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் வைரமுத்து எழுதியுள்ள ஓப்பனிங் சாங் வரிகளை வைரமுத்துவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  குறிப்பாக அந்த ட்வீட்டில் வைரமுத்து ‘பைரவா’ படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியிடப்படலாம். ரசிகர்களுக்கு வரிகளை முதலில் வாசிக்கத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். பாடலும் படமும் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம். என்று கூறியுள்ளார்.

 

 அந்த பாடல் வரிகள் இதோ...


பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு

குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு

கட்டுக் கட்டா – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு

ஓ... கடலில் ரயிலும் போகும்
காசை எடு

இமயம் 
கொஞ்சம் குனியும்
காசை எடு

பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? ... ஓ
அள்ளிக் கொடு – இல்ல
ஆட்டம் போடு

சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு

கட்டு கட்டாச் – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே

எதிரி வந்தால் 
மோதிப் பாக்கணுமே

ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே


நீதி கேட்டு – தம்பி
நீயே நில்லு 

தப்பாதப்பா
விஜயன் வில்லு

ரெண்டாயிரம் – ஆண்டா
வாழப்போற? – சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close