Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

14 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஷாருக்கான் - ஐஸ்வர்யா ராய்!

 

பாலிவுட்டின் சூப்பர் ஜோடிகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள் ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும். அவர்கள் இருவரும் காதலர்களாக மட்டுமே இணைந்து நடிக்காமல், சகோதர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். யார் கண் பட்டதோ, கடந்த பல வருடங்களாக அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. இந்த ஜோடி நடித்த கடைசி படம் 2002 ல் வெளியான 'தேவதாஸ்'.

ஏ தில் ஹை ஷூட்டிங்கில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராயைப் பார்த்த கரண் ஜோஹாருக்கு அவர்களை ஜோடி சேர்த்து புதிய படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அவர்களுக்கென கதையையும் தயார் செய்துவிட்டாராம் கரண். மீண்டும் ஜோடி சேர்வதை அறிந்து பாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது ஷாருக்கானும், அபிஷேக் பச்சனும் நல்ல நண்பர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நல்ல ஈடுபாட்டோடு ஷாரூக் நடிப்பார் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ