Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இளமி’ன்னா என்னான்னு தெரியுமா..?

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

‘சாட்டை’ படத்தில் கதாநாயகனாக நடித்த யுவனும், ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனுகிருஷ்ணா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் இளமி. இந்த படத்தை இயக்குநர் ரவிமரியாவின் உதவியாளர் ஜே.ஜூலியன் பிரகாஷ், தனது முதல் படமாக எடுத்துள்ளார்.

 
இளவி படம் பற்றி இயக்குநர் கூறியதாவது, “இளவி படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றியது. இப்போது உள்ள ஜல்லிக்கட்டு மாதிரி நானூறு வருடங்களுக்கு  முன்பு இல்லை. மாட்டை ஓடவிட்டு பின்னால் ஓடி அடக்குவது இப்போதைய ஜல்லிக்கட்டு. நானூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டுக்கு பேர் வடம் ஜல்லிக்கட்டு. சீறி வரும் காளையை நேருக்கு நேர் நின்று மேல் சட்டை எதுவுமின்றி காளையை அடக்கி வெற்றி பெறுவதுதான் அப்போதைய நிஜ ஜல்லிக்கட்டு. அதைத் தான் இதில் பதிவு செய்திருக்கிறோம்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில், “தீ பறக்க முட்டி பாரு, திமில நீயும் தொட்டு பாரு, எங்க ஊரு ஜல்லிக்கட்டு, எதிர நின்னு மல்லுக்கட்டு” என்ற ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் காட்சியை தேனி மாவட்டத்தில் படமாக்கியுள்ளோம். யுவன், அனு கிருஷ்ணா, வில்லனாக ‘கல்லூரி’ படத்தில் நடித்த அகில் உட்பட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

இப்போ இருக்கிற தலைமுறையினர் யாரும் பார்த்திராத புது மாதிரியான ஜல்லிக்கட்டை இளமியில் பதிவு செய்திருக்கிறோம். ஆனால், இளவி என்றால் என்ன அர்த்தம் என்பதை நீங்கள் படத்தில் பார்த்து தான் தெரிஞ்சுக்கணும் பாஸ்” என்றார் இயக்குநர் ஜூலியன் பிரகாஷ்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ