Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூர்யாவுடன் இணையும் சுரேஷ் சந்திர மேனன்..!

சிங்கம்-3 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது விக்னேஷ் சிவனின் படத்தில் நடித்துவருகிறார் சூர்யா.

இந்த படத்துக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று பெயரும் வைத்து விட்டனர். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் காமெடிக்கு ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் புதிதாக இணைந்துள்ளார், சுரேஷ் சந்திர மேனன். இவர் தமிழில் புதிய முகம் என்கிற படத்தை இயக்கி, படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

கண்ணுக்கு மை அழகு பாடலில் ரேவதியோடு நடித்திருப்பாரே, அவரே தான் இவர். நீண்ட நாட்களுக்கு பிறகு இவரை இந்த படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிக்க வைக்கயுள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ