Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்புவை முந்தும் ஜிவி.பிரகாஷ்!

நவம்பர் 10-ம் தேதி, ஜிவி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ ரிலீஸாகவுள்ளது. நவம்பர் 11-ம் தேதி, வெள்ளிக்கிழமை அதிகம் எதிர்பார்க்கப்படும் சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வெளியாகிறது. சின்னச் சின்ன பிரச்னைகள் போய் கொண்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், வரும் வெள்ளிக்கிழமை படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் படம், ‘மீன்குழம்பும் மண்பானையும்’. இந்த படத்தில் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல்,  கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த படமும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. நான்காவதாக இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ என்ற படமும் நவம்பர் 12-ம் தேதி ரிலீஸாகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ