Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பர் 27-ம் தேதி, கமலுக்கு பாராட்டு விழா..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நவம்பர் 27-ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கவுள்ளது. இந்த பொதுக்குழுவில் செவாலியே விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது.

அதுமட்டுமில்லாமல் மூத்த நாடக கலைஞர்களை கௌரவப்படுத்தவும் நடிகர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி நடிகர் விஷால் கூறியதாவது, “நாங்கள் பொறுப்புக்கு வந்தபின்னர் நடக்கும் இரண்டாவது பொதுக்குழு இது. இதில் செவாலியே விருது பெற்ற கமலுக்கு பொதுக்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் சங்கத்தில் இருந்து, முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் செயலாளர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இரண்டு பேரையும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு அழைக்கவில்லை” என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ