Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் இன்னும் ஓகே சொல்லல..!

'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், மீண்டும் இயக்குநர் அட்லீயுடன் இணையும் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பது உறுதியாகிவிட்டது. இந்த படமே இன்னும் ஆரம்பிக்காத நிலையில் விஜய்யின் அடுத்த படத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டது கோலிவுட் வட்டாரம். அட்லீ படத்தை முடித்துவிட்டு செல்வராகவனின் படத்தில் விஜய் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தை தனுஷ் தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் வருகிறது. ஆனால், செல்வராகவன் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

இதைப்பற்றி பிரபுவிடம் கேட்டபோது,“கடந்த 6,7 வருடங்களாகவே விஜய்யை வைத்து நாங்க படம் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறோம். அதை அவரிடம் கேட்கும் போதெல்லாம், கண்டிப்பாக பண்ணலாம்னு சொல்லி வருகிறார். அவர் எப்போது ஓகே சொன்னாலும் உடனே படத்தை ஆரம்பிச்சிடுவோம். தகவல்களையும் உடனே சொல்லிவிடுவோம். இன்று வரை நாங்கள் விஜய்யின் அடுத்தப்படத்தை தயாரிப்பது உறுதியாகவில்லை” என்றார் பிரபு. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close