Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500, 1000 ரூபாய் பிரச்னையால் சினிமா படப்பிடிப்பு ரத்து!

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்ததை பலரும் வரவேற்றிருந்தாலும், சில மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் என பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய படப்பிடிப்புகளும் ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதே போல நாளை வெளியாகவிருந்த சில படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் ரிலீஸ் தேதி 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும், படப்பிடிப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலியைக் கையில் கொடுக்க வேண்டிய சிக்கலும் ஏற்பட்டுள்ளதால் சில படங்களின் படப்பிடிப்பானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நூறு ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடுகள் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இன்னும் சில தியேட்டர்களில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close