Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தடைகளைக் கடக்குமா சிவகார்த்திகேயனின் ஷூட்டிங்!?

ரெமோ படத்திற்குப் பின், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். ரெமோ தயாரிப்பாளர் ராஜா தான் இந்தப் படத்தையும் தயாரிக்க இருக்கிறார். படம் நாளை தொடங்க இருக்கிறது. படத்தில் நயந்தாரா,மலையாள நடிகர் பகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கிறார்கள். 


ரெமோ படத்தின் ரிலீஸூக்கு முன்பே, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன்,வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோரின் தயாரிப்பில் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. பல்வேறு இழுபறிக்கு பின்னர் தான் ரெமோ படத்தை ரிலீஸ் செய்தனர். டத்தின் தயாரிப்பாளர் ராஜா, திரையுலகில் இல்லாத ஒன்றாக அவரே வினியோகஸ்தர்களிடம் சென்று படத்தை விற்றார். 


பிறகு மீண்டும் அந்தப் படத்தில் நடிக்க நிர்பந்திக்கப்பட்டார் சிவகார்த்திகேயன். அதன் காரணமாகாத்தான் ரெமோ படத்தின் நன்றி விழாவில், கண்ணீர்விட்டு அழுதார் சிவகார்த்தியேன்.


மோகன் ராஜா இயக்கத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்னும் போது, மீண்டும் இந்தப் பிரச்னை வெடித்தது. தயாரிப்பாளர் கவுன்சிலில் சிவகார்த்திகேயன் மீது புகார் செய்தது தயாரிப்பு குழு. மூன்று முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பெப்சி சிவா முன்னிலையில் , சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.


நாளை சென்னை , வேளச்சேரியில்,மோகன் ராஜா படத்தினை பூஜையுடன் ஆரம்பிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்று மாலை, மீண்டும் மூவர் படத்தின் ஷூட்டிங் தொடங்கக்கூடாது என மீண்டும் தயாரிப்பு கவுன்சிலில் அழுத்தம் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. 
இதுகுறித்து பெப்சி சிவாவிடம் பேசினோம், " சிவகார்த்திகேயனை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நான் தான். ஆனால், என்ன நடந்தது என தெரியவில்லை.நான் இப்போது கோவையில் இருக்கிறேன்.மாலை 6 மணிக்கு கால் செய்து,நாளை ஷூட்டிங்கை கேன்சல் செய்ய சொல்லுங்கள் என்கிறார்கள். என்ன செய்வது என தெரியவில்லை" என்றார். 


இதற்கிடையில், நாளை ஷுட்டிங் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, இன்று மதியம் சென்னை வேளச்சேரியில் ஷூட்டிங் தொடங்கியது

 

- சத்யாபதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ